/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/453_11.jpg)
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசனுக்கு சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சரவணன் திமுகவில் சீட் கிடைக்காத நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இணைந்தவுடன் அவருக்கு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் புதூரில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கதவை பூட்டி போராட்டம் நடத்தினர்.
பின்னர் ராம. சீனிவாசனுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும், மதிமுகவில் இருந்து ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து மீண்டும் திமுகவில் இணைந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானர். தற்போது திமுகவில் சீட்டு மறுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய இராம. சீனிவாசனுக்கு சீட்டு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)