Advertisment

அதிமுக உட்கட்சி விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Madras High Court verdict today for ADMK party internal issue

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதே சமயம் தேர்தல் ஆணையம், ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுத் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரிவான விசாரணை நடைபெற்று வந்தது.

Advertisment

அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 7ஆம் தேதி (07.02.2025) மீண்டும் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கல்யாணசுந்தரம், “உட்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. கட்சியில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு நீடிக்கிறது.

Advertisment

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என வாதிட்டார். இவ்வாறு அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.02.2025) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு அளிக்கிறது.

judgement admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe