Advertisment

ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து வாக்களித்த மதுசூதனன் (படங்கள்)

ttttt

Advertisment

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில்,2021 சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், வாக்களிப்பதற்காக மாலை மருத்துவமனையில் இருந்து (மருத்துவமனையின்) ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவரும், உடன் இருந்த செவிலியர்களும் கரோனா உடை அடைந்திருந்தனர். ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ் அப்போது உடனிருந்தார்.

aiadmk Madhusudhanan rk nagar tn assembly election 2021 vote
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe