Skip to main content

ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து வாக்களித்த மதுசூதனன் (படங்கள்)

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

ttttt

 

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், வாக்களிப்பதற்காக மாலை மருத்துவமனையில் இருந்து (மருத்துவமனையின்) ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.

 

அவரும், உடன் இருந்த செவிலியர்களும் கரோனா உடை அடைந்திருந்தனர். ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ் அப்போது உடனிருந்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு; கெஜ்ரிவால் அரசின் நிலை?

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Arvind Kejriwal government won on Trust vote in Delhi Assembly

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லியில், 62 இடங்களில் ஆம் ஆத்மியும், 8 இடங்களில் பா.ஜ.கவும் கடந்த 2020ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை வெற்றி பெற்றிருந்தது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.க.வும் மோதல் போக்கு நடந்து வருகிறது.

இதனையடுத்து, தனது ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். 

இந்த நிலையில், டெல்லி சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று (16-02-24) தெரிவித்திருந்தார். அதன்படி, டெல்லி சட்டசபையில் இன்று (17-02-24) அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதன் மீதான தீர்மானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதனைத் தொடர்ந்து, விவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கூட பிரிந்து செல்லவில்லை. அதில் 2 உறுப்பினர்கள் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 3 உறுப்பினர்கள் சொந்தப் பணி காரணமாக வெளியே சென்றுவிட்டனர். 2 பேர் சிறையில் உள்ளனர். ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்” என்று கூறினார். 

Next Story

வாக்களிக்க வந்த முதல்வருக்கே ஷாக்; மிசோரத்தில் பரபரப்பு

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Shock for the Chief who came to vote; The excitement in Mizoram

 

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது தொடங்கி உள்ளன. சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல் மிசோரம் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும்  தொடங்கியுள்ளது.

 

மிசோரத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 40 தொகுதிகளிலும் சுமார் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 வேட்பாளர்கள் மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் மிசோரம் முதல்வர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றிருந்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்காமலேயே அவர் திரும்பிச் சென்றது நிகழ்ந்துள்ளது. அய்ஸ்வால் வடக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்ஸ்வால் வெங்கலை ஒன்று பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மிசோரம் முதல்வர் சோரம் தங்கா வாக்களிக்கச் சென்றிருந்தார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.