Advertisment

பாஜக மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன் தொடர்பான அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட மதன்!

ddd

தமிழ்நாடுபாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன். இவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன். இவர் மதன் டைரி என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவருகிறார். இந்தச் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், "பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்" எனக் கூறி ஒரு காட்சியை வெளியிட்டார்.

Advertisment

அந்த வீடியோவில், கே.டி. ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டே, விவரிக்க முடியாத ஒரு தவறான செயலில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து பேசிய மதன், "இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம். அவரது ஒப்புதலுடன்தான் இந்த வீடியோவை வெளியிட்டோம்" எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ, விவரிக்கவோ வெளியிடவோ முடியாத அளவுக்கு உள்ளதால் அந்தக் காட்சிகளை இங்கே பகிர இயலவில்லை.

இது தொடர்பாக கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன். என்னையும் என்கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத்தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.

kt raghavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe