கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்கு சேகரித்தார் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி.

Advertisment

அப்போது அவர்,

தம்பிதுரை வாடிக்கையே பொய் சொல்லுவதுதான். மோடி அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை என்று சொன்னார் தம்பிதுரை. இப்போது மோடி அரசாங்கம் சிறந்த அரசாங்கம் என்கிறார். எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் சிறந்த அரசாங்கம் இல்லை என்று சொன்ன அன்புமணி ராமதாஸ் இப்போது சிறந்த அரசாங்கம் என்கிறார்.

Advertisment

M. Thambi Durai - V. Senthil Balaji

இந்த தொகுதிக்காக ஏதாவது ஒன்று செய்ததாக சொல்லுங்கள். அதிமுகவினர் மேடையை போட்டு சொல்லுங்கள். தம்பிதுரை 10 வருடம் எம்.பி. அதில் 5 வருடம் துணை சபாநாயகர். இந்த திட்டங்களெல்லாம் டெல்லியில் இருந்து கேட்டு செய்து தந்தார் என்று ஓட்டு கேட்கட்டும்.

கொள்கை இல்லாமல் அமைந்திருக்கிற கூட்டணி அதிமுக கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி இரண்டு, மூன்று ஆண்டுகள் ஒன்றாக பயணித்து கொள்கைக்காக அமைந்திருக்கின்ற கூட்டணி. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisment