Advertisment

“கலவரத்தை உண்டாக்க திட்டங்களை தீட்டிவிட்டு முன்கூட்டியே கூறுகிறார்களா என சந்தேகம்..” எம்.எம். அப்துல்லா

M M Abdulla dmk interview about tamil nadu election result

Advertisment

தமிழகம் உட்பட இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக நேற்று (29/04/21) மாலை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டனர். அதில்பெரும்பாலுமானநிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் திமுக 160 முதல் 170 இடங்களில் வென்றுஆட்சியைபிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அயலகதிமுகவின் இணை செயலாளர் எம்.எம். அப்துல்லா நக்கீரனுக்குஅளித்தப்பேட்டியின் சுருக்கம்.

தேர்தலுக்குபின்பு வந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என வந்திருக்கிறது. அதனை திமுக தரப்பில்எப்படிபார்க்கிறீர்கள்?

இதை, பிந்தைய கருத்துக் கணிப்பாக நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள்ஆரம்பத்தில் இருந்தேசொல்லிக்கொண்டிருக்கிறோம், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும், அதிலும் அது முழுமையான வெற்றியாகத்தான் இருக்கும் என்று. 2019 தேர்தலிலும்கிட்டதட்ட40 தொகுதிகளில் நிச்சயமாகவெற்றி பெறுவோம் என்றுதெரிவித்துதான்திமுகவினர் பிரச்சாரத்தையே துவங்கினோம். அதே போன்று தான் தற்போதும் திமுகவின் தலைவர் 234தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிபிரச்சாரத்தைதுவங்கினார்.

Advertisment

அனைத்து தொகுதிகளிலும் வெற்றிஎனகூறியது போன்றே திமுகவினரின் பிரச்சாரமும் இருந்தது. மேலும் மு.க. ஸ்டாலின் ‘இந்த வெற்றி முழுமையான வெற்றியாக இருக்க வேண்டும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’எனபிரச்சாரம் மேற்கொள்ளும் அனைத்து தொகுதிகளிலும் தெரிவித்தார்.அதற்குகாரணம் என்.ஆர்.சி, நீட் போன்ற மத்திய அரசால் கொண்டுவரப்பட்டகொடுங்கோளானஎந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம்நாடளுமன்றகீழவையில்முழுவதும் அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். அதனால்ஏற்றுகொள்ளப்படுகிறது. அதேவேளையில், நாடாளுமன்றம்மேலவையில்அதிமுகவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது என்பதால், அனைத்து கருப்பு சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதைதான் ஸ்டாலின், பிரச்சாரத்தில் குறிப்பிட்டு தமிழகத்தில் முழுமையான வெற்றியை ஈட்டும்பட்சத்தில்மேலவையில்நாம்அதனைதடுக்க முடியும் என்றார். இதனைமுன்வைத்துதான் திமுகவினரின் பிரச்சாரங்கள் இருந்தது. அதனால் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெறுவது நிச்சயம் தான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதிமுகவினர் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தாலும், அதைஏற்றுகொள்ளமுடியாததாகவேஉள்ளது. ஏனென்றால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எல்லாரும் தங்கள்மீது முழு நம்பிக்கையாக இருப்பது இயற்கை. அதனால் அவர்களது நம்பிக்கையை நாம்பாரட்டுவோம்; ஆனால், எதார்த்த சூழல் அப்படி இல்லை என்பது தான் உண்மை.

கடைசி நேரத்தில் பல சட்டங்கள் நிறைவேற்றியது, கடுமையாக உழைத்தது எல்லாம்நிச்சயமாகபலன் கொடுக்கும் என்று கூறுவது எல்லாம்ற்றுகொள்ளமுடியாத ஒன்று. ஏனென்றால் கடந்த பத்து வருடங்களாக மக்கள் ஒரு கொடுமையான ஆட்சியை அனுபவித்து வருகிறார்கள். 100சதவிதம்மக்கள் தெளிவாக உள்ளார்கள். மறுபடியும் அதிமுக ஆட்சி வந்தே ஆக வேண்டும் என்று கூறுவதற்கு, இந்த ஆட்சியில் பாலாறும்,தேனாறும்ஓடவில்லை.அதைபோல் இது சுயமான ஆட்சியாக இல்லை, பாஜக’வின்மற்றொருஆட்சியாகதான் உள்ளது. எனவே மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் சுத்தமாக இல்லை.

வாக்கு எண்ணிக்கையானது மே 2ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர்பாபுமுருகவேல்தமிழக தேர்தல்அதிகாரியிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் வாக்கு எண்ணிக்கை அன்று திமுகவினர் கலவரம்செய்வதற்குசதி செய்கிறது.இதைதேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் கூடுதல் மத்தியபாதுகாப்புபடையினர் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் புகாரில் குறிப்பிட்டிருப்பதைஎப்படிபார்க்கிறீர்கள்?

அதாவது 100% வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் யாரும் கலவரம் செய்ய யோசிக்கமாட்டார்கள். திமுகவினர்ஆரம்பத்தில் இருந்தேகூறியது போல் முழுமையான வெற்றியைப் பெறுவோம். அப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கும் நாங்கள் கலவரம்செய்யதேவையில்லை. ஆனால்பாபுகூறியதைபார்க்கும் பொழுது எப்படி இருக்கிறது என்றால் ஒரு தெருவில் திருடன் வந்து திருடிய பின்பு ‘திருடன் திருடன்’ என அவன் வேறுஒருவனைகாண்பித்து ஓடுவான்.அதைபோன்று இவர்கள் கலவரத்தைஉண்டாக்கதிட்டங்களைதீட்டிவிட்டு முன்கூட்டியே கூறுகிறார்களாஎனசந்தேகமாகஇருக்கிறது. வெற்றி பெறும் வாய்ப்பில் திமுகவினர் இருக்கிறோம். தற்போது திமுகவினர் கலவரம் செய்தால் சேதாரம் வெற்றிபெறபோகும்எங்களுக்குதான். அதிமுகவினர்தோல்வியைதாங்கிக்கொள்ள முடியாமல் கலவரம் செய்வார்களோ என்ற எண்ணத்தில்.ஆரம்பத்தில் இருந்தேதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தில்பாதுகாப்பைபல படுத்த வேண்டும் என்றுகேட்டுகொண்டுஇருக்கிறோம். கலவரம் செய்கிற எண்ணத்தில் திமுகவினர் இருந்தால்எதற்குபாதுகாப்புகேட்கபோகிறோம்.

tn assembly election 2021 admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe