சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நடைப்பெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுகவில் பிளவு ஏற்படும் என்று நாங்கள் ஏற்கனவே சொன்னதுதான். மு.க.அழகிரியின் அரசியல் பணி பற்றி மதுரையில் இருக்கும் எனக்கு தெரியும். அவருடைய திறமை, அவருடைய ஆற்றல், தேர்தல் காலங்களில் அவர் ஆற்றக்கூடிய பாங்கெல்லாம் எனக்கு தெரியும். மிகச் சிறந்த ஒரு அரசியல் தந்திரம், அரசியல் சாணக்கியம் கொண்டவர். அப்படிப்பட்டவர் இன்று போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் திராவிட கட்சிகள் இயங்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறாரே?
தமிழிசை அவர்கள் தேசிய கட்சியில் இருக்கக்கூடியவர். அந்தக் கட்சியில் இருந்துகொண்டு அப்படித்தான் பேச முடியும். அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல, அவரவர்களும் தங்கள் கட்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த அடிப்படையில் அவர் சொல்லியிருக்கிறார். இவ்வாறு கூறினார்.