M. K. Alagiri

Advertisment

செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இசக்கி முத்து, முபாரக் மந்திரி, மன்னன், கோபிநாதன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இசக்கி முத்து, முபாரக் மந்திரி, மன்னன், கோபிநாதன் ஆகியோர் தங்களது நண்பர்கள், உறவினர்கள், தங்களுடன் உள்ள திமுகவினரையும் அழைத்து வந்திருந்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் 5ஆம் தேதி மாலை இந்த பேரணி நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.