M. K. Alagiri

Advertisment

செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மண்டபத்திற்கு வெளியே நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தொண்டர்கள்,

மதுரைக்கு அழகிரி வந்ததில் இருந்து நாங்கள் அவருக்கு ஆதரவாக உள்ளோம். அவர் சொல்லுகிற வழியில் நடப்போம். தற்போது நாங்கள் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் திமுகவை விட்டு போக மாட்டோம். கருப்பு சிவப்பு வேட்டிதான் கட்டியிருக்கோம். அழகிரி என்ன முடிவு எடுக்கிறாரோ, அதனை ஏற்று நடப்போம். அவர் கடலில் குதிக்க சொன்னாலும் குதிப்போம்.

Advertisment

இது எங்கள் கட்சி. நாங்கள் எங்கும் போகமாட்டோம். தலைவர் பதவிக்கு அழகிரி என்றைக்கும் ஆசைப்பட்டது இல்லை. அழகிரி என்ன சொல்கிறார், கட்சியை ஒழுங்காக வழி நடத்துங்கள், ஜால்ரா கூட்டங்களை கூட வைத்திருக்காதீர்கள் என சொல்கிறார். நாங்கள் தலைவர் பதவி கேட்கவில்லை, முதல் அமைச்சர் பதவி கேட்கவில்லை, தகுதியான பதவியை கேட்கிறோம், உழைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்கிறோம் அவ்வளவுதான். பாஜக பின்னால் இருப்பதாக சொல்வதெல்லாம் பொய் என்றனர்.