/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/850_21.jpg)
மாற்று சித்தாந்தம் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் விருந்து சாப்பிட விரும்புவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி திட்டமான தலைவா திட்ட நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை. “பாஜக தொண்டர்கள் நம் சித்தாந்தங்களை பின்பற்றுவதோடு அல்லாமல் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். நான் மாற்று கொள்கைகளை கொண்ட தலைவர்களுடன் பழக ஆசைப்படுகிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு உண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எதிர்த்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும்போது நம் மனம் திறக்கும். நான் அத்தகையவர்களுடன் பழக விரும்புகிறேன். அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடன் எல்லாம் பழகி பேச வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சிக்காரர்களிடம் கூறினேன். அதைக் கேட்டதும் பாஜக கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜகவின் மாநிலத் தலைவர் சந்திக்கலாமா என தயங்கினார்கள் ஆனால் நான் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசீர்வாதத்தை பெற்றேன்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)