Skip to main content

“சசிகலா தாய் அல்ல பேய்” - முன்னாள் அமைச்சர் பகீர் பேச்சு!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

"A lot of things happened in the party without Jayalalithaa's knowledge .... Sasikala is not a mother but a ghost" - Minister Pakir's speech

 

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், சசிகலாவிடம் யாரும் பேசக்கூடாது. அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, “சசிகலா அதிமுகவில் உறுப்பினரே கிடையாது.

 

ஆனால் அவர் தற்போது தொலைபேசியில் சிலருடன் பேசி அதிமுகவின் வளர்ச்சி மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கிறார். அதிமுக தலைமைக்கு வெற்றிடமும் பஞ்சமுமில்லை. கட்சியை இரட்டை குழல் துப்பாக்கி போல் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி கௌரவமானதுதான். இன்னும் சொல்லப்போனால், வெற்றிகரமான தோல்வி. கட்சிக்குள் பிரச்சனை ஏற்படுத்தியதால் ஜெயலலிதாவே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் கட்சியில் நடந்தன, அதற்கு காரணம் சசிகலாதான். நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை ஜெயலலிதா நம்பினார்.

 

ஆனால் ஜெயலிதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் சசிகலா. ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால் ஜெயலலிதா எவ்வாறு இறந்தார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு எதுவும் தெரியாது, சசிகலாவின் உறவினர்கள்தான் கட்சியில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சசிகலா தற்போது தன்னை தாய் என்று கூறிவருகிறார், அவர் தாய் அல்ல பேய்தான். அவரது சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். கட்சியினர் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்” என்று கூறினார். இக்கூட்டத்தில் ஜெ பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.