Skip to main content

மயிலாடுதுறை திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்ட காதர்மொகிதின்...

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டைக்கு வந்திருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தொகுதி நிலவரம் குறித்தும், தமிழக நிலவரங்கள் குறித்தும் பேசினார்.

 

khader mohideen

 

"திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியும் விரைவில் நடைபெறும்.

கருத்து கணிப்பின் படி இந்திய அளவில் 311 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என வருகிறது. செல்லும் இடமெல்லாம் திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மதம் சார்ந்த பிரச்சனைகளில் அந்த மதத்தின் உள்ளவர்களே மத பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக தமிழக அரசோ நீதிமன்றமோ மத சார்பான பிரச்சனைகளில் தலையிடுவது தவறு" என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இ.யூ.மு.லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீனுக்கு முதல்வர் வாழ்த்து!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

C M congratulates iUM League President KM Khader Moideen

 

இ.யூ.மு.லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த கல்விப் புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும், வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்...” - காதர் மொகிதீன்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

"The people should decide whether Modi becomes PM again.." - Khader Mokhideen

 

“2024-ல் நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலில் மதவாதத்தைப் புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனையுடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என்று இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். 

 

கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொகிதீன், “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் 75-ஆம் ஆண்டு பவள விழா வரும் 20-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளோம். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். இந்தியாவில் உள்ள அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் மாநாடாக நடைபெற இருப்பதால் சுமார் 2 லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாகத் தொடர்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் 5-வது முறையாக முதல்வரான பிறகு தனது மகன் மு.க.ஸ்டாலினை அமைச்சராக்கினார். ஆனால், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளிலேயே தனது மகன் உதயநிதி ஸ்டாலினை பொறுப்புமிக்க அமைச்சராக்கி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஓர் இளைஞர். நல்ல சிந்தனை உடையவர். அனைவரிடமும் நெருக்கமாகப் பழகக் கூடியவர். தமிழக அரசியலில் நல்ல எதிர்காலத்திற்கு தொடக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.

 

ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்பது, இந்தியாவுக்கு என தனிப் பெருமை ஆகும். இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மாநாடு மூலம் இந்தியாவுக்கு பேரும் புகழும் கிடைக்கும். 

 

2024-ஆம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் உள்ள சமூக நீதியை ஏற்றுக்கொண்ட கட்சிகள், மதவாதத்தை புறந்தள்ளுகின்ற கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். சீன நாட்டின் பிரச்சனையில் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்பியதைப் பார்க்கும்போது, வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வாய்ப்புள்ளது. அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது.

 

நம் இந்திய நாட்டின் பிரதமர் சிறந்த தலைவராகத்தான் இருக்க முடியும். அனைவரும் விரும்பிதான் மோடியை பிரதமர் ஆக்கியுள்ளோம். அவரது கொள்கையில் சில மாறுபாடுகள் இருக்கும். அதனை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயற்கைதான். ஜி-20 மாநாட்டில் மோடியை முன்னிலைப்படுத்தித்தான் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை, மோடியின் காலத்தில்தான் வந்தது. பிரதமர் மோடியை நாட்டு மக்கள் சிறந்தவர் என்று கூறுவதற்கு நான் உடன்படத்தான் செய்கிறேன்.

 

வரும் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் நடைபெறும் மாநாட்டின்போது முடிவெடுப்போம். இதேபோல் பாஜக மற்றும் அதனுடன் சார்ந்த கட்சியுடன் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவதற்கு நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வரும் தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்தார்.