Advertisment

பொறுத்திருந்து பார்ப்போம் : வைகோ 

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. கடைசி மற்றும் 7-வது கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப்பதிவு நடந்தது.

Advertisment

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் மத்தியில் பாஜக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

Advertisment

vaiko

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''தேர்தல் முடிவுகளுக்கு 3 நாளே இருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம். காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும். பல நேரங்களில் கருத்து கணிப்புகள் அப்படியே நடந்துவிடாது. 2004 கருத்து கணிப்புப்படி தேர்தல் முடிவுகள் அமையவில்லை. திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். ஐந்து ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை மோடி சந்திக்கவில்லை. கடைசியாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும் அமித்ஷாவை பதில் கூற சொல்லிவிட்டார்''. இவ்வாறு கூறினார்.

vaiko

‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார், தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார்.

Lok Sabha election vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe