Skip to main content

ஜெ. பாணியில் ஓ.பி.எஸ்.  மகன் ஓட்டு வேட்டை!!!  கூட்டம் சேர்பதற்கு தலைக்கு 500 ரூபாய்!!! 

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தேனி பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள்  தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தங்க தமிழ்செல்வனும் களத்தில் குதித்திருக்கிறார்கள். 
 

ravindranath



இதில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட ரவீந்திரநாத் தேர்தல் பிரச்சாரத்தில், தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இப்படி  மக்களிடம் ரவீந்திரநாத் ஓட்டு கேட்க செல்வதற்கு முன்பே அந்தந்த பகுதியிலுள்ள கட்சிக்காரர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பெண்களைத் திரட்டி, தலைக்கு 500 ரூபாய் என பேரம் பேசி டோக்கன் கொடுத்து, ஆரத்தியுடனும், கும்ப மரியாதையுடனும் அந்தப் பெண்களை வரிசையில் நிற்க வைத்து விடுகிறார்கள்.


அதன்பின் சிறிது நேரத்திலேயே ஓட்டு கேட்க வரும் ஓ.பி.எஸ். மகனின் பிரச்சார ஜீப்முன் அந்தப் பெண்கள் சுற்றி நின்று விடுவார்கள். இவையெல்லாம் ஜெயலலிதா பிரச்சாரத்தின்போதுதான் நடக்கும். அதே பாணியை ஓ.பி.எஸ். மகனும் கடைபிடித்து வருகிறார். அதன்பின் கூடியிருந்த அந்த பெண்கள்  மத்தியில் ஓ.பி.எஸ். மகன் பேசியவுடனே அருகே இருக்கும் அமைச்சர் உதயக்குமார் கூட்டத்தில் இருக்கும் பெண்களிடம் குலவை போடசொல்கிறார். அதைக் கேட்டவுடனே அமைச்சர், ரொம்ப சந்தோஷம், தம்பி வெற்றி பெற்று விடுவார் என்று சொன்னவுடனே ஓ.பி.எஸ். மகனின் பிரச்சார ஜீப் அடுத்த ஸ்பாட்டுக்கு சென்று விடுகிறது. அதன்பின் உடன் வரும் ஓ.பி.எஸ். மகனின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்களிடம் இருக்கும் டோக்கனை வாங்கிக் கொண்டு தலைக்கு 500 ரூபாய் வீதம் பகிரங்கமாகவே கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். 

 

ravindranath


அந்தளவுக்கு அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் உதயகுமார் களம் இறங்கி வருகிறார். ஆனால் வேட்பாளரான ஓ.பி.எஸ். மகனை  தேர்தல் அதிகாரிபின் தொடர்ந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஓ.பி.எஸ். மகன் என்பதால், தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா நடப்பதையும் கண்டு கொள்ளாமலேயே   போய்விடுகிறார்கள். இப்படித்தான் பெரியகுளம் ஒன்றியம், கம்பம் ஒன்றியம் உட்பட சில பகுதிகளில் ஓ.பி.எஸ். மகன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத் பேசும்போது... அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நான் உங்களை வீடு தேடி வந்து ஆதரவு கேட்டிருப்பேன். ஆனால் 6 சட்டமன்ற தொகுதிக்கும் போக வேண்டும் என்பதால் வர முடியவில்லை. நான் இப்பகுதிக்கு புதியவன் அல்ல, இந்த மண்ணின் மைந்தன் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகனும்கூட. இதற்கு முன்பு இதே பகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு இங்கு வந்து ஓட்டு கேட்டிருக்கிறேன். தற்போது உங்கள் வீட்டுப் பிள்ளையான  எனக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால், நமது மாவட்ட பகுதி வழியாக திண்டுக்கல் முதல் சபரிமலை வரை செல்லும் அகல ரயில் பாதை திட்டத்தை கொண்டுவருவேன்.


20 ஆண்டுகளுக்கு முன்பு நமது தேனி மாவட்ட பகுதி அடிப்படை வசதியில் பின் தங்கியிருந்தது. தற்போது அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாக்கு சேகரிக்க வரும் மற்ற வேட்பாளர்கள் உங்களையெல்லாம் குழப்புவார்கள். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வெளியூரான ஒருவர், ஈரோட்டில் இருந்து வந்திருக்கிறார். அவர் வெளியூர்க்காரர் அவரை நீங்கள் தேடிப்போய்தான் பார்க்கமுடியும். இன்னொரு வேட்பாளர் வாயிலேயே கோலம் போடுவார், அது ஒன்றுக்கும் உதவாது. எனவே உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.  இந்த ஓ.பி.எஸ். மகனின் தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.