Advertisment

''உழைப்பின் பலனை உள்ளாட்சித் தேர்தலே காட்டுகிறது'' - அமைச்சர் எ.வ. வேலு பேட்டி! 

 '' Local elections show the benefits '' - Interview with Minister EV Velu!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

காலை 11.53நிலவரப்படி, 140 மாவட்ட ஊராட்சிவார்டுஉறுப்பினர்களுக்கான தேர்தலில் 19 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது. 1,381 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 53 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக2இடத்திலும் முன்னிலையில் உள்ளன. அதிகப்படியான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு டெல்லியில்செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசுகையில், ''முதல்வர் மு.க. ஸ்டாலினின் உழைப்பின் பலனை ஊரக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது'' என தெரிவித்துள்ளார்.

local body election ev velu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe