தனது இரண்டு மனைவிகளை ஊராட்சி மன்ற தலைவராக்கிய அதிமுக பிரமுகர்!

ஒரு மனைவியை வைத்துக்கொண்டு படாதபாடு படுபவர்கள் கணவன்மார்கள். இதில் இரண்டு மனைவி என்றால் அந்த ஆணின் நிலையை நினைத்துப்பாருங்கள். அவளுக்கு பட்டுப்புடவை வாங்கி தந்துயிருக்க, எனக்கு காட்டன் புடவை வாங்கி தந்துயிருக்க என்பதில் தொடங்கி, அவ வீட்டுக்கு போனா சாம்பார் ஊத்தனாலும் திண்ணுட்டு வர்ற, இங்க வந்தா மட்டும் கறி சோறு தான் வேணும்ன்னு கேட்கற என எகிறி அடிப்பதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் சில கணவன்மார்களை பார்த்துவருகிறோம்.

vandhavasi

அதே வரிசையில் இரண்டு திருமணம் செய்தாலும், இருவரையும் ஒரே வீட்டில் குடிவைத்து சாமர்த்தியமாக குடும்ப வண்டியை ஓட்டும் சில கணவன்மார்களும் இருக்கிறார்கள். இரண்டு மனைவிகளுக்கும், ஒரே கலரில், ஓரே டிசைனில் புடவை வாங்கித்தருவதில் இருந்து, இருவருக்கு ஒரே விதமான ரவா தோசை வாங்கி தருவது வரை பார்த்துள்ளோம். தனது இரண்டு மனைவிகளையும் ஊராட்சி மன்ற தலைவராக வேண்டும் என ஆசைப்பட தனது இரண்டு மனைவிகளை ஊராட்சி மன்ற தலைவராக்கி அழகு பார்த்துள்ளார் ஒரு பாசக்கார கணவர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தில் வழுர்அகரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் தனசேகரன். இவர் பிற்படுத்தப்பட்டோர் சாதியை சேர்ந்தவர். அதே சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவரது பெயர் செல்வி. தலைவரான கெத்தில் ஊரை வலம் வரும்போது கோவில்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மற்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த காஞ்சனாவை திருமணம் செய்துக்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. கோவில்குப்பம், வழுர்அகரம் என இரண்டு கிராம பஞ்சாயத்துக்களும் பெண்களுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தனசேகரால் போட்டியிட முடியாத நிலை. இதனால் தனது மனைவிகளான செல்வி மற்றும் காஞ்சனாவை தேர்தலில் நிறுத்த முடிவு செய்தார் தனசேகரன்.

கோவில்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு காஞ்சனாவையும், வழுர்அகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு செல்வியையும் நிறுத்தினார். ஜனவரி 2ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தனது இரண்டு மனைவிகளும் வெற்றி பெற்று தலைவராகயிருப்பது அவரை பெருமைப்பட வைத்துள்ளது.

admk local body election panchayat President vanthavasi wife
இதையும் படியுங்கள்
Subscribe