Advertisment

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பு... பாமக கடும் அதிர்ச்சி... 

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம். விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும். மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

pmk

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பாமகவுக்கு செல்வாக்கு இருப்பதால், தாங்கள் தற்போது போட்டியிடாமல் போவது பாமக தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால், கட்சித் தொண்டர்களை உள்ளாட்சித் தேர்தலில் நாமதான் வெற்றி பெறுவோம் என்று உற்சாகப்படுத்தி வைத்திருந்தால் இப்படி திடீரென நமக்கு செல்வாக்கான மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்களே என்று பாமக கடும் கோபத்தில் உள்ளதாம். மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடித்துவிட்டு மாவட்டங்களை பிரித்தால் என்ன? அதற்குள் அவசர அவசரமாக ஏன் மாவட்டத்தை பிரித்தார்கள் என்றும், உள்ளாட்சித் தேர்தல் குளறுபடிகளுக்கு அதிமுக அரசே காணரம் என்றும் பாமகவினர் குற்றம் சாட்டி வருகிறார்களாம்.

judgement local body election pmk shock Supreme Court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe