Advertisment

சொந்த ஊரில் வெற்றி பெற்ற அமமுக... அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.

ops

Advertisment

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரானதேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டில் போட்டியிட்ட அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பெரியகுளம் அருகே உள்ளது கீழவடகரை பஞ்சாயத்து. இதற்கு உட்பட்ட அழகர்சாமிபுரம், கரட்டூர் ஆகியவற்றை இணைத்து பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.ம.மு.க சார்பில் மருதையம்மாள் என்பரும், அ.தி.மு.க சார்பில் மாரியம்மாள் என்பவரும் போட்டியிட்டனர். இதில், மருதையம்மாள் 1,700 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை 143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.

ops Candidate ammk periyakulam local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe