Skip to main content

உள்ளாட்சித் தேர்தல் - முழு முடிவுகள் தெரிய வர நாளை காலை 5 மணி ஆகும்...

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

 

ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 
 

சேலம் மாவட்டங்களில் உள்ள 20 ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள வைஸ்யா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை 11 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 

local body election



இதுகுறித்து விசாரித்தபோது, வாக்கு எண்ணிக்கை பணிக்கு ஒதுக்கப்பட்ட ஊழிர்களுக்கு, விதிமுறைகள் என்னென்ன? ஒவ்வொரு டேபிளிலும் எத்தனை மேற்பார்வையாளர்கள் இருக்க வேண்டும்? ஒரு வேட்பாளருக்கு எத்தனை முகவர்கள் அனுமதிக்கலாம் போன்ற அடிப்படை தகவல்களே இன்று காலையில்தான்தான் சொல்லியுள்ளனர். மேலும் பெட்டியை உடைத்து நான்கு விதமாக வாக்குச்சீட்டுக்களை பிரிப்பதற்கே காலை 11 மணி ஆகவிட்டது. மாவட்டம் முழுக்கவே இதேபோல் 11 மற்றும் 11.30 மணிக்கு மேல்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் இந்த மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர நாளை அதிகாலை 4 அல்லது 5 மணி வரை ஆகலாம் என்கிறார்கள்.


 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, எட்டு வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பலர் புதியவர்கள். அவர்கள் போதிய விவரங்கள் தெரியவில்லை. ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாததால் வாக்கு எண்ணிக்கை தொடங்க காலதாமதமானது என்றனர். 


 

மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தெரிந்துகொள்ள ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மீடியா சென்டர் அமைத்திருப்பார்கள். ஆனால் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் மீடியா சென்டர் மையம் ஏற்படுத்தவில்லை. உரிய தகவல்கள் தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் முயற்சி செய்தபோது, காவல்துறையினர் உள்ளே செல்லவிடாமல் தடுக்கின்றனர். இதனால் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் - 2 முடிவு வெளியீடு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
TNPSC Notification on Group – 2 result output

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இதனையடுத்து, சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி (இன்று) வரை நடைபெற்றது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 

இந்த நிலையில், குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், அதன் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில், 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்ணை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
TNPSC Group-2 Main Exam Results Released!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.பி. கட்டுப்பாட்டு அலுவலர் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 நேர்காணல் பதவிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளன. எனவே தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்குத் தேர்வானவர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மற்றும் 2ஏ  தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதாவது ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களுடன் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் குரூப்-2 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 5,240லிருந்து 5,860 ஆக அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து தற்போது 6151 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.