Advertisment

சீமானை சந்தித்து வாழ்த்து பெறுவேன்... அதிமுக வேட்பாளரை வீழ்த்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளை கொண்ட நாம் தமிழா் கட்சி கடந்த சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தோ்தலில் தனியாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்போது நாம் தமிழா் கட்சி மீது அனைத்து கட்சிகளும் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருந்தன. பல தொகுதிகளில் முக்கிய கட்சியின் வேட்பாளா்களின் தோல்விக்கு நாம் தமிழா் கட்சி காரணமாக இருக்கும் என்று கருதபட்டது.

Advertisment

sunil

ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை பெற்று முக்கிய கட்சிகளின் பட்டியலில் கால்பதித்த நாம் தமிழா் கட்சி, உள்ளாட்சி தோ்தலிலும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட்டன. குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஓன்றியம் 11-ஆவது வார்டில் அதிமுக வேட்பாளா் சிலுவைதாசனை வீழ்த்தி நாம் தமிழா் கட்சியின் சுனில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisment

வெற்றி பெற்ற சுனில் நம்மிடம் பேசும்போது, மீனவா் சமுதாயத்தை சோ்ந்த பொறியியல் பட்டதாரியான நான் மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். நாம் தமிழா் கட்சியின் கொள்கை மற்றும் தலைவா் சீமான் இளைஞா்கள் மீது வைத்தியிருக்கும் நம்பிக்கையால் ஈா்க்கபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதில் உறுப்பினராக சோ்ந்தேன். இதே போல் எனது ஊரிலும் பலா் சோ்ந்தனா். தலைவா் சீமானை நேரில் இதுவரை சந்தித்தது கிடையாது. இந்த வெற்றியின் சான்றிதழை அவரிடம் நேரில் கொடுத்து சந்திக்க இருக்கிறேன். நாம் தமிழா் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த தமிழ் மக்களின் வளா்ச்சிக்கு உழைப்பதே எனது நோக்கம் என்றார்.

naam thamizhar aiadmk local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe