List published by Annamalai; AIADMK question

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாத்தூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னைப்பொறுத்தவரையில் அரசியல் கட்சித் தலைவராக, பாஜகவின் தலைவராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை என்ற நபர் வெளியிட்டாரா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

Advertisment

பாஜக சார்பாக அவர் வெளியிட்டிருந்தால் குறைந்தபட்சம் அவர்கள்ஆட்சி செய்யும் மாநிலத்தைத் தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, ஒரிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அம்மாநில பாஜகவின் தலைவர் இதுபோன்று அம்மாநிலத்தின் தலைவர் மீது ஊழல் பட்டியல் வெளியிட இருக்கிறார்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

Advertisment

ஜூன் மாதத்தில் அண்ணாமலை பயணம் மேற்கொள்வதாக சொல்லியுள்ளார். ஏதோ அவர் மட்டும் தான் இந்த நாட்டிற்காக பிறந்தவர் போல் பேசிக்கொண்டுள்ளார். இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள் தியாகம் செய்தவர்கள் பல லட்சம் பேர் உள்ளார்கள்” எனக் கூறினார்.