Lets make Stalin Chief Minister again in Tamil Nadu says Former Minister Srinivasan

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் இன்று ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என உளறி கொட்டினார். இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே பின்னர் மீண்டும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேசுகையில், “நான் மாற்றி சொல்லி விட்டேன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவோம்” என கூறினார்.

Advertisment

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் கண்ணன், மாநகர எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், நெப்போலியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பரமசிவம், தேன்மொழி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் 500க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.