திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இல்லை என பா.ஜ.க.வின் வடமேற்கு பொறுப்பாளர் ராம் மாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

Tripura

திரிபுரா மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தின் பெலோனியா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட லெனின் சிலையை பா.ஜ.க.வினர் புல்டோசர் உதவியோடு இடித்துத் தள்ளினர். அவர்களில் சிலர் பாரத் மாதா கீ ஜே எனவும் கோஷம் எழுப்பினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க.வின் வடமேற்கு பொறுப்பாளர் ராம் மாதவ், ‘லெனின் சிலை தனியார் நிலத்தில் நிறுவப்பட்டிருந்தது. அதை நிறுவியவர்களே தற்போது இடித்துத் தள்ளினர். ஆனால், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக சி.பி.எம். தவறாக சித்தரித்து வருகின்றனர்’ என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

Tripura

ஆனால், லெனின் சிலை இடிப்பு சம்பவம் குறித்து அன்றைய தினம் ராம் மாதவ், ‘லெனின் சிலை இடிக்கப்பட்டிருக்கிறது. இது நடந்தது ரஷ்யாவில் இல்லை; திரிபுராவில்.. சலோ பால்ட்டாய் (மாற்றத்தை உண்டாக்குவோம்)’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதிக எதிர்ப்புகளுக்குப் பிறகு அதை நீக்கினார்.