''உதிரும் கட்டடங்கள் ஆளும் அரசுகளின் சீர்கேட்டை காட்டுகிறது'' - சீமான் கண்டனம்

 '' Leaking buildings show the corruption of the ruling governmentS '' - Seeman condemned

கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர்.

இந்தக் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் தெரிவித்துவந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அத்தொகுதியின் திமுக எம்எல்ஏ பரந்தாமன் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதேபோல் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

 '' Leaking buildings show the corruption of the ruling governmentS '' - Seeman condemned

இந்தக் குடியிருப்பு கட்டடம் தரமற்ற நிலையில் இருப்பது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புளியந்தோப்பில் குடியிருப்பு கட்டடங்கள் உதிர்ந்துவிழும் காட்சி ஆளும் அரசுகளின் நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. முகலிவாக்கம் அடுக்குமாடி விபத்து போல மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துவிட கூடாது. மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

Chennai naam thamizhar seeman
இதையும் படியுங்கள்
Subscribe