'' Leadership will decide the alliance '' - Tamil Nadu BJP's top official interview!

Advertisment

தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல விசயங்களைப் பேசியிருக்கிறார் தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி.

அவர் பேசும்போது,’’தமிழகத்துக்கு நிறையத்திட்டங்களை மத்திய அரசு கொடுத்தாலும் மத்திய அரசுக்கு எதிராகத்தான் இருக்கிறது திமுக. அவர்களுக்கு பாசிட்டிவ் எண்ணம் இல்லை. முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் தமிழக சிறையிலிருந்து 700 கைதிகளை விடுதலை செய்வது ஆபத்தானது. தமிழ்நாட்டில் 7 லட்சம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதை மீட்காமல் மறைத்து வருகிறார்கள்.

அதிமுக மற்றும் பாமக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும். ஆனால், கூட்டணியை பற்றிகட்சித்தலைமைதான் அறிவிக்கும். தமிழகத்தில் பாஜக வலிமையடைந்து வருகிறது’’ என்று பேசியிருக்கிறார் சி.டி.ரவி.