நகைச்சுவை நடிகர் விவேக்(59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 4:35 மணியளவில் காலமானார். அவரின் மறைவுக்குஅரசியல் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மதிமுக தலைவர் வைகோ, திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி, ஆ.ராசா, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிநேகன் மற்றும் வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், ரசிகர்களும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூடியுள்ளனர்.

Advertisment