Advertisment

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள்..! 

Leaders of the Indian Union Muslim League met and congratulated MK Stalin ..!

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது திமுக. இந்நிலையில், அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, பல்வேறு தரப்பினரும் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அதுபோல், அண்ணா அறிவலாயத்தில் இன்று (05.05.2021) காலைஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரும் துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி ஆகியோர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வீட்டில் ஓய்வெடுத்து வருவதால் அவருடைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். இச்சந்திப்பின்போது திமுகவின் முதன்மைச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு உடன் இருந்தார்.

mk stalin indian union muslim league
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe