Advertisment

மெரினாவை கைப்பற்றி இருக்கலாமே செயல் தலைவரே.... திமுக தொண்டனின் ஆதங்கம்!

merina

Advertisment

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் இன்று மறியல், கடையடைப்பு, ரயில் மறியல் என பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முதலில் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மெரினாவை நோக்கி நடக்க தொடங்கவே காவல்துறையின் தடுப்புகளை மீறு மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு அமர்ந்து தலைவர்கள் மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தனர். சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு விட்டு தலைவர்கள் கைதாகி விடுவார்கள் என்று காவல்துறை நினைத்திருந்த நிலையில் மறியல் தொடர்ந்தது. அதன் பின்னர் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை வலுக்கட்டாயமாக தூக்கி காவல்துறை வண்டியில் ஏற்றினார்கள்.

lathi

Advertisment

தலைவர்கள் ஏற்றப்பட்ட வண்டியை தொண்டர்கள் மறித்து வழி விடாமல் சாலையில் அமர்ந்தனர். அவர்களை அப்புறப்படுத்தி அந்த வண்டியை அனுப்பி வைத்தனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு புரசைவாக்கம் லட்சுமி மகாலில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்த தொண்டரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது போராட்டம் வெற்றி தானே சார் என்றோம்.

anna

போராட்டம் வெற்றி தான் சார். ஆனா, ஒரு வருத்தம் சார் என்றார். என்ன வருத்தம் சார் ? அவர் சொல்லும் போது, "மெரினாவில் போராட்டம் செய்ய கூடாது என்று தமிழக அரசும், காவல்துறையும் தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இன்று திமுக உட்பட பல கட்சியை சேர்ந்தவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை செய்து இருக்கிறோம். சரியான திட்டமிட்டு இருந்தால் மெரினாவில் அமர்ந்து போராட்டம் நடத்தி இருக்கலாம். அப்படி நடத்தி இருந்தால் திமுக தொண்டர்கள் குவிந்திருப்பார்கள். மக்களும் மாணவர்களும் நிச்சயம் கூடி இருப்பார்கள். எடப்பாடி அரசை திக்குமுக்காட வைத்து இருக்கலாம். பெரிய போராட்டக் களமாக மாற்றி இருக்கலாம். அப்படிச் செய்யாமல் விட்டது தான் மிகப் பெரிய ஆதங்கம் என்றார்.

உங்களை ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கவே வேண்டாம் என்று சொல்லி தவிர்த்து விட்டு சென்று விட்டார்.

தமிழகத்தில் பந்த் வெற்றி தான். ஆனால் அந்த மெரினாவை கைப்பற்றாமல் விட்டது தான் தொண்டர்களுக்கு வருத்தம்.

Leader
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe