
'திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கடந்த 31 ஆம் தேதி இரவு 12 மணி தொடங்கி, 1 ஆம் தேதி இரவு 12 மணி வரையில் அனைத்து கோயில்களிலும்தரிசனத்துக்கு அனுமதி அளித்தது இறையன்பர்கள் மத்தியில், அவர்கள் மனங்குளிர்கின்ற வகையிலிருந்தது. இதனால் இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிரானஅரசுஅல்ல, ஆன்மிகவாதிகளையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஒரு அரசு என்பதை நிரூபித்திருக்கின்றோம். சுமார் 1,640 கோடி ரூபாய்மதிப்புடைய கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 437 நபர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் மீட்கப்படுகின்ற வேட்டை தொடர்ந்து கொண்டே இருக்கும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us