Advertisment

கர்நாடக போலிசுடன் தமிழகம் வந்த கொள்ளையன் முருகன்! அதிர்ச்சி மற்றும் குழப்பத்தில் தமிழக போலிஸ்!

திருச்சியில் மிகப் பிரபலமான நகைக் கடையான லலிதா ஜீவல்லரியில் துளைபோட்டு நடந்த 13 கோடி ரூபாய் நகைக் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் கொள்ளையன் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை திருச்சி டி.சி. மயில்வாகணன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் சுரேஷ் திருவண்ணாமலையிலும் முருகன் பெங்களூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

Advertisment

murugan

பெங்களூர் சிறையில் இருந்த முருகனை பெங்களூர் வங்கி கொள்ளைசம்பவம் தொடர்பாக அவரை அழைத்துக்கொண்டு பெங்களூரு போலீசார் நேற்றிரவு பெங்களூரில் இருந்து கிளம்பி இன்று பெரம்பலூர் வந்தனர்.

பெங்களூரில் நடந்த வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட தங்கத்தை பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒருத்தரிடம் கொடுத்ததாக முருகன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து முருகனை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே பெங்களூரு போலீசார் வந்துக்கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது கர்நடாக போலிசார் முருகனை அழைத்துக்கொண்டு தமிழகத்திற்கு நுழைந்து விட்டார்கள் என்ற தகவலை உளவுத்துறை மூலம் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீஸ்வேப்பந்தட்டையில் வைத்து கர்நாடக போலிசை தடுத்து நிறுத்தியது.

அப்போது பெரம்பலூர் டி.எஸ்.பி. கோபால்ராஜன் மற்றும் போலீசார், ஏற்கனவே திருச்சியில் சமயபுரம் டோல்கேட்டில் வங்கி கொள்ளை மற்றும் லலிதா ஜுவல்லரி ஆகிய இடங்களில் நகை கொள்ளையடித்திருப்பதில் முருகனுக்கு தொடர்பு இருப்பதாகவும், முருகன் நகைகளை இங்கே கொடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லியிருப்பதால் அந்த நகைகள் திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளா? என்று தெரிந்து கொள்ள வேண்டும், நாங்களும் சேர்ந்து விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். முருகனையும் கர்நாடகா போலீஸையும் அழைத்துக்கொண்டு பெரம்பலூர் பகுதியில் பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி தனிப்படை போலீசார்முருகனை அழைத்து வந்து விசாரிக்க நினைக்கையில் அதற்குள்ளாக கர்நாடக போலிஸ் முருகனை தமிழகம் அழைத்து வந்திருப்பது திருச்சி தனிப்படைக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி தனிப்படை போலீசார் பெரம்பலூர் சென்றிருக்கிறார்கள்.

இதற்கு இடையில் நேற்று திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் திருச்சி போலீஸ் வாரண்டுடன் பெங்களூரு போவதாக பத்திரிகை அறிவிப்பு கொடுத்த நிலையில் கொள்ளையன் முருகனுக்கு பெங்களுர் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் எப்படி கர்நாடக போலிஸ் முருகனை பெங்களுர் சிறையில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்கள்? என்கிற சந்தேகம் தமிழகபோலிசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், இதுகுறித்தும் விசாரணை தொடர்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Perambalur Bengaluru Robbery lalitha jewellery Murugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe