தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று (12/01/2021) நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகம் வரும் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சென்னை மதுரவாயலில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறார். கன்னியாகுமரி நாடளுமன்ற இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதனைச் சந்திக்க பா.ஜ.க தயாராக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது.
தி.மு.க. கூட்டணி இன்னும் முடிவாகவில்லை அதே நேரத்தில், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா? கனிமொழியா? அல்லது உதயநிதியா? என்று சொல்ல முடியாத நிலையில் தி.மு.க. உள்ளது” என்றார்.