Advertisment

“எல். முருகன் செய்தது மிகப்பெரிய குற்றம்” - நாஞ்சில் சம்பத்!

publive-image

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் தமிழ்நாடுபாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது தமிழ்நாடுபாஜக தலைவராக பதவியேற்றுள்ளார். இவர் தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகன், தனது பயோடேட்டாவில் கொங்கு நாடு என குறிப்பிட்டது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்தது. அதுகுறித்து திராவிட இயக்கப் பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். அவரது பதில்கள் பின் வருமாறு...

Advertisment

எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருடைய பயோடேட்டா வெளியானது. அதில் கொங்குநாடு என்று குறிப்பிட்டுள்ளார் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisment

இது மிகப் பெரிய குற்றம், அவ்வாறு எழுதியிருக்கக் கூடாது. எல். முருகன் சட்டம் படித்தவர். அவர் இதனைப் போட்டுக்கொள்ள எவ்வாறு ஒப்புக்கொண்டார் என எனக்குத் தெரியவில்லை. காரணம், இந்திய வரைபடத்தில் கொங்குநாடு என்றொரு நாடு கிடையாது. இல்லாத ஒரு நாட்டை ரகசிய காப்புப் பிரமாணம், விஸ்வாசப் பிரமாணம் எடுத்து மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர் போட்டிருப்பது மிகப் பெரிய குற்றம். இதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு ஆயிரம் முகாந்திரங்கள் இருக்கிறது. இதையெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவைல்லை.

இந்தியாவின் வரைபடத்தில் இல்லாத ஒரு நாட்டை கொங்குநாடு என்று எழுதியிருப்பதன் மூலம் மிகப் பெரிய குற்றத்தைப் பிஜேபி கட்சியினுடைய தலைவராக இருந்த எல். முருகன் இன்று செய்திருக்கிறார். ஆகவே இது தமிழ்நாடு அரசுக்கு விடப்பட்டிருக்க அறைகூவலாக நான் கருதவில்லை. இந்தியதேசத்தினுடைய கட்டுமானத்திற்கே விடப்பட்ட அறைகூவலாக இதைப் பார்க்கிறேன். கொங்குநாடு என்று ஏற்கனவே பேச்சு வழக்கில் இருக்கிறது. அது நாஞ்சில் நாடு, பாண்டிநாடு, பல்லவ நாடு, தொண்டை நாடு, சேதுபதி சீமை, தென்பாண்டி நாடு இவ்வாறு தமிழகத்தில் பல இடங்களை நாம் நாடாக பேச்சு வழக்கில் கூறுவதுண்டு.

அதேபோல் இராமநாட்டுக்கு சென்றாலே அங்கு ஆப்பநாடு, அருவாநாடு, பாப்பா நாடு போன்ற பல நாடுகள் அங்கேயே இருக்கிறது. அதற்காக அந்த நாட்டுக்கு நூறு கொடி, அந்த நாட்டிற்கு என்று நூறு சாம்ராஜ்யமா? அதுவும் பிஜேபி கட்சியா இந்தப் பாவத்தை செய்வது. என்னால் இதையெல்லாம் பார்த்துவிட்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கிற கட்சி, இப்படி ஒரு மாவட்ட செயற்குழு கூட்டத்தைக்கூட்டி தீர்மானம் போடுவதற்கு அனுமதிக்கலாமா? என்னைக் கேட்டால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்தியாவின் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் ‘நான் சொல்வது, கொங்கு நாடு என்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்க போகிறவர் போட்டிருப்பது, சட்டத்தையும் இந்தியாவின் இறையாண்மையையும் மீறியிருக்கிறார். அதனால் அவரை திரும்பப் பெற வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறேன்.

nanjil sampath l.murugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe