Advertisment

கிரிகிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவிகள்! மீட்கும் முயற்சியில் கனிமொழி

Tamilnadu Medical Students

கரோனாவின் பிடியிலிருந்து உலக நாடுகள் இன்னமும் மீளவில்லை! மக்களை மீட்பதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஊரடங்கை உலக நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலிருந்து மேற்படிப்புகளுக்காக பல்வேறு உலக நாடுகளுக்குச்சென்ற மாணவ-மாணவிகள், பொது முடக்கத்தால் அங்கேயே முடங்க வேண்டிய சூழல்.

Advertisment

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வருகிற நிலையில், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியா மாணவ-மாணவிகள் சொந்த நாட்டிற்குத்திரும்ப முடியாமல் தவித்தனர். இதனை அறிந்து, இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் எடுத்த முயற்சியில், அந்த மாநிலத்தின் மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், சீனாவின் மேற்கு எல்லையைக் கடந்து உஷ்பெகிஸ்தான் நாட்டின் அருகில் உள்ள கிரிகிஸ்தான் நாட்டில் தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் தவித்து வந்த நிலையில், தமிழகம் தவிர்த்த மற்ற மாநில அரசுகள், மத்திய அரசின் உதவியுடன் தங்களுடைய மாணவ-மாணவிகளை தங்கள் மாநிலத்துக்கு வரவழைத்துக் கொண்டனர். ஆனால், தமிழக மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிர்கிஸ்தான் நாட்டிலேயே பரிதவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகம் வருவதற்கு உதவி செய்யுங்கள் என திமுக எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் மாணவ-மாணவிகள். இது குறித்து அவர்கள் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதனையறிந்து, கிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவ-மாணவிகளை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கனிமொழி. இதற்காக, தனி விமானம் அனுப்பி அவர்களை மீட்பதற்காக மத்திய அரசிடம் பேசியுள்ளார்.

dmk mp kanimozhi Medical Student Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe