
குஷ்புவின் விலகல் குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்பு கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாகப் பார்க்கவில்லை. அவர், கட்சியிலும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை. அவர் நடிகையாகவே இருந்தார் எனவும் கூறியுள்ளார்.
குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த இழப்பும் இல்லை எனவும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
Follow Us