Advertisment

அமித்ஷா மீது வழக்கு பதிய வேண்டும்!  -குணங்குடி அனீபா ஆவேசம் 

டெல்லியில் நடந்த கலவரத்தைக் கண்டித்து கடந்த 29-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலை சிறுத்தைகக் கட்சி. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க.மற்றும் த.மு.மு.க. தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Advertisment

kunangudi hanifa

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில் பேசிய ம.ம.க., த.மு.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முஸ்லீம் இயக்கத்தின் மூத்த தலைவருமான குணங்குடி அனீபா, "குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு பிறகு அஸ்ஸாம், உத்தரபிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம், 11 எம்.பி.க்களை வைத்திருக்கும் அதிமுகவும், ஒரு எம்.பி. வைத்திருக்கும் பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுதான். அதிமுகவும்பாமகவும் இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மக்கள் விரோத சட்டத்தை ஆதரித்து அதனை வெற்றிப்பெற வைத்த குற்றத்திற்கு பரிகாரமாக தமிழக சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும். அதனை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். கலவரங்களுக்கு காரணமான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்வதுடன், அவர் மீது டெல்லி கலவரத்தை தூண்டிய வழக்கு பதிய வேண்டும். சி.ஏ.ஏ. சட்டம் திரும்ப பெறும் வரை ஜனநாயக முறையில் தமுமுக, மமக போராடும்" என ஆவேசமாகப் பேசினார்.

Chennai Kunangudi Hanifa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe