Advertisment

நாங்குநேரியில் போட்டியிட குமரி அனந்தன் விருப்ப மனு!

நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு அளித்தார்.

Advertisment

Kumari Ananthan

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி, சென்னை - அண்ணா அறிவாலயம் சென்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி- காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்றார்.

Advertisment

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில், நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார்.

ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன், நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது சகோதரர் வசந்தகுமார் தற்போது குமரி மக்களவை உறுப்பினராக உள்ளார். இவரது மகள் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக உள்ளார்.

By election congress kumari ananthan nanguneri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe