Advertisment

இது ஒன்றும் தமிழ்நாடல்ல... காட்டமான குமாரசாமி...

kumaraswamy

Advertisment

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சிகுள்ளான பாஜக, மஜத தலைமைக்கு மிரட்டல் விட தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பு காங்கிரசை முறியடிக்க சில தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவு கொடுத்ததை அக்கட்சியின் டெல்லி தலைமை குமாரசாமிக்கு சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த உங்கள் தேர்தல் செலவையும் நாங்கள் கவனித்துக்கொண்டோம் என மிரட்டல் விடுத்ததோடு ரகசிய உடன்படிக்கையை மீறக்கூடாது என்று கூறியிருக்கிறது.

அதில் பாஜக, காங்கிரஸ் கட்சியைவிட குறைவான தொகுதிகளை பெற்றிருந்தால் அப்போது ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் உதவும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அப்போது துணை முதல்வராகத்தான் ஏற்றுக்கொள்வோம் என்றும் பாஜக ரகசிய பேச்சு இருந்துள்ளது. ஆனால் இப்போது காங்கிரஸ் குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியே கொடுத்துள்ளது. இதனால் குமாரசாமி காங்கிரஸ் கட்சியோடு உடன்பட்டு ஆட்சி அமைக்க உள்ளார். கடுப்பான பாஜக டெல்லி தலைமை சில மிரட்டல்களை குமாரசாமிக்கு கொடுக்க, உங்கள் வேலையை என்னிடம் காட்ட வேண்டாம். இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார் குமாரசாமி.

kumaraswamy
இதையும் படியுங்கள்
Subscribe