h.d.kumaraswamy

கர்நாடக முதல்வராக வருகிற 23-ந் தேதி எச்.டி.குமாரசாமி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று வருகை தர உள்ளார். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக குமாரசாமியின் சகோதரர், தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களின் வேட்பாளர் பட்டியலை ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை திருச்சி வரும் குமாரசாமி, சமயபுரம் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்னர், 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.