கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார். மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதனை விரும்பவில்லை. ஆட்சி கவிழவும் அவர்கள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார். குமாரசாமியின் இந்த கருத்தால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் பெங்களூரு காவல் ஆணையர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், எடியூரப்பாவால் பாஸ்கர ராவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

Advertisment

politics

இதனையடுத்து காவல் ஆணையர் பாஸ்கர ராவ், ப்ரோக்கர் ஒருவரிடம் பேசி காவல் ஆணையர் பதவியை பெற்றுத்தருவதற்கு பேரம் பேசிய தொலைப்பேசி உரையாடல் கர்நாடக டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரணை துவங்கிய போது, பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் கடந்த சில மாதங்களாக ஒட்டுக் கேட்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் கர்நாடகா அரசியல்வாதிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வு குறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி சாமியிடம் கேட்டதற்கு தனக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்ற எடியூரப்பா இது குறித்து விசாரித்து அறிக்கை தரும் படி தலைமை செயலாளருக்கு உத்தரவு பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.