ku ka selvam mla

மா.செ.பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்து பாஜகவுடன் நட்பு பாராட்டிய திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்ட நிலையில், கட்சியின் அதிகாரபூர்வமாக இப்போது இணைய வேண்டாம் என பாஜக தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

Advertisment

அதேசமயம், திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் தொழில் சார்ந்த ரகசியங்களை சேகரித்து ரிப்போர்ட் தருமாறு அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசுமாறு சென்னை அதிமுகவினர் கு.க.செல்வத்தை பழைய தோழமையின் அடிப்படையில் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்களிடம் விவாதம் நடக்கிறது. விரைவில், சபாநாயகரிடம் இது குறித்த கடிதம் கொடுக்கப்படலாம் என்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள்!