தி.மு.கவை விமர்சனம் செய்ய ராஜேந்திரபாலாஜிக்கு எந்த அருகதையும் இல்லை... நாகை வழக்கறிஞர் அணி கண்டனம்...

தி.மு.க.வையும், தி.மு.க. தலைவரையும் விமர்சனம் செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எந்த அருகதையும் இல்லை என நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் அணி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து நாகை வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவருமான வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில்,

“திமுகவையும், எங்கள் உயிரினும் மேலான தலைவர் ஸ்டாலினையும் விமர்சிக்க தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எந்த அருகதையும் இல்லை. பேட்டி என்கிற பெயரில் ஏதாவது உளறுவதை வாடிக்கையாக கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் ஆனநாள் முதல் அவர் அளித்துள்ள பேட்டிகளை பார்க்கும்பொழுது,அவர் அமைச்சர் பதவிக்கு தகுதியானவரா என்கிற படிப்பறிவு இல்லாத பாமரமக்களுக்கே சந்தேகம் வந்துவிடும். அதனால் உடனடியாக அவரின் மன நிலையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான பிறகுதான் அவர் பேட்டி கொடுக்க வேண்டும். அவருடைய பேட்டிகளை பார்க்கும்பொழுது மனநிலை சரியில்லாத நபர் பேட்டி கொடுக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான மக்களின் துயரை திமுகவும் உயிரினும் மேலான தலைவர் ஸ்டாலினும் போக்கினார்கள்.ஒரு அரசாங்கம் செய்ய தவறியதை ஒரு எதிர்க்கட்சி செய்து காட்டியது. உலக அளவில் எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் மக்களுடைய தேவையை பூர்த்தி செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்திற்கு போராடிய மக்களுக்கு அவர்களின் துயரை திமுக போக்கியது. ஒன்றிணைவோம் வா ஒரு சரித்திர திட்டம். உலகில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளுக்கு அது ஒரு பாடம்.

அரசாங்கம் இல்லை என்றாலும் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று உயிரினும் மேலான ஸ்டாலின் மக்களோடு மக்களாய் தன்னுடைய உடல் நலத்தைகூட பாராமல் களப்பணி ஆற்றி லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தவர். ஸ்டாலினையும் அவர் வழி நடந்துச் செல்கின்ற இயக்கத்தையும் விமர்சனம் செய்வதற்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்ல, யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. ராஜேந்திர பாலாஜியின் தேவையற்ற விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் சரியான பதிலடி பாடம் கொடுப்போம்" என்கிறார்.

admk K. T. Rajenthra Bhalaji lawyers minister Nagapattinam team
இதையும் படியுங்கள்
Subscribe