K.Sundaram passed away 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசித்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் கா. சுந்தரம் (76) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த அவர் இன்று உயிரிழந்தார். திமுகவின் பட்டியல் இன தலைவர்களில் ஒருவராக இருந்த கா.சுந்தரம் கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பொன்னேரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கலைஞர் தலைமையிலான அப்போதைய திமுக அமைச்சரவையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகவும், மீண்டும் 1996 ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

Advertisment

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார், பின்னர் 2022 ஆம் ஆண்டு கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட போது ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினராகவும் அவருக்கு பதவி வழங்கி கட்சி கௌரவித்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் கையால் பேரறிஞர் அண்ணா விருதை பெற்றார்.

Advertisment

மறைந்த முன்னாள் அமைச்சர் கா.சுந்தரத்திற்கு எழுலணி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், மேலும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்த வர உள்ளதாக தெரிகிறது.