k.s.alagiri

காங்கிரஸ் கட்சியின் வயநாடு பாராளுமன்றஉறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 149 நாட்களில் 3500 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு , பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் வகையில் இந்த நடைபயணம் அமையும் என அக்கட்சியினரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அடுத்த மாதம் நடைபெறும் நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்மத்திய அமைச்சரவையில் மாற்றம் வர இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்ட போது"மத்திய அமைச்சரவையில் மாற்றம் வேண்டும் எனில் முதலில் பிரதமரைத்தான் மாற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Advertisment