Skip to main content

"நான்கு மாதம் கழித்து அண்ணாமலை திருவாய் மலர்ந்திருக்கிறார்" - கே.எஸ்.அழகிரி பேட்டி

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

KS Azhagiri interview

 

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். பொதுவாகவே அவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடிக்கடி சொல்வார்கள். பிரதமர் வந்து சென்ற நான்கு மாதம் ஆகிறது. நான்கு மாதம் கழித்து தான் அண்ணாமலை திருவாய் மலர்ந்திருக்கிறார், பாதுகாப்பு இல்லை என்று. ஆனால், தமிழக காவல்துறையின் தலைவர் சொல்லியிருக்கிறார் எந்த விதமான குறைபாடும் இல்லை. முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்.

 

இவர்கள் யோசித்து யோசித்து குற்றம் சொல்கிறார்கள். குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்கிறார்கள். ஒரு தவறான விளம்பரத்திற்காக இவர்கள் செயல்படுகிறார்களே தவிர இவர்களுக்கு ஆக்கபூர்வமான கொள்கைகள் எதுவும் கிடையாது. தமிழகத்தோடு பிற மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பணிகள் முடிந்து பிரதமர் திறந்து வைத்து விட்டார். ஆனால், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காம்பவுண்ட் சுவரைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

 

தமிழ்நாட்டில் இருக்கிற பாரத ஜனதா கட்சி டெல்லி சென்று அங்கு செயல்பட வேண்டும். ஏன் எங்கள் மாநிலத்தைப் புறக்கணித்துள்ளீர்கள்? மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டது. எங்கள் மாநிலத்தில் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை? வெளியில் எப்படி தலை காட்டுவது என்ற கேள்வியை அவர்கள் கேட்க வேண்டும் அல்லவா. அப்படி செய்தால் தான் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்று பெயர்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
BJP MLA says Self-respect is important and he Resigned his position in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தேர்தலில் போட்டியிடவில்லை” - காங்கிரஸ் வேட்பாளர் திடீர் முடிவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தனது உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், வரும் மே 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை கடந்த 12ஆம் தேதி அன்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் குப்தா, அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தது. 

Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

தேர்தல் தேதி நெருங்கும் இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோஹன் குப்தா அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மோசமான உடல்நிலை காரணமாக, எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான், வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். ரோஹன் குப்தா போட்டியிடுவதாக இருந்த அகமதாபாத் தொகுதியில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஹஸ்முக் பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள  26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.