604

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாஜக பிரமுகர் ஒருவர் ஓட ஒட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் இளைஞரணியில் உள்ளார். ரங்கநாத் நேற்று இரவு தனது மகனின் பிறந்த நாளைகொண்டாடினார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரங்கநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

ரங்கநாத்துக்கும், போத்தச்சந்திரம் கிராமத்தைசேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கெலமங்கலம் காவல் நிலைய போலீசார் பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.