தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரப்பணிகளை தற்போதேதமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தலைமையும் அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் சட்டமன்றத்தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியது அதிமுக தலைமை.
அதிமுக தலைமை ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியைமுதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைமையோ பாஜக மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறது.அண்மையில் சென்னையில்நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டஉள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களானமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக-பாஜக கூட்டணியை மேடையிலேயே உறுதிப்படுத்தியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்தும் மேலிடம்தான்முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என தமிழக பாஜக தலைமை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதேபோல் அண்மையில் சிவகங்கையில் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டபாஜக துணைத்தலைவர் அண்ணாமலை சிவகங்கையின் சட்டமன்றத்தொகுதிகளைபாஜக கைகாட்டும்ஒருவருக்குகொடுங்கள் 2021-ஆம்ஆண்டு தேர்தலில்ஹெச்.ராஜாவைசட்டமன்ற உறுப்பினராக்குவோம், அமைச்சராக்குவோம் எனக் கூறியிருந்தார்.
இச்சூழலில் இன்று நடந்தபொதுக்கூட்டத்தில் பேசியஅ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கடந்த 50 ஆண்டு காலமாக எந்த தேசியக்கட்சியும் தமிழகத்தில் உள்ளே வரவிடாமல் திராவிட இயக்கம் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்கின்றனசில அரசியல் கட்சிகள்.சிலர் சொல்லுகிறார்கள் திராவிட இயக்க ஆட்சியிலே இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள் என்று. யார் சொல்வது, சில தேசியக்கட்சிகள் சொல்கிறது.சில சந்தர்ப்ப வாதிகள் சொல்கிறார்கள். உயர் நிலையிலிருந்து நீண்டகாலமாக, தந்தை பெரியார் காலத்திலிருந்தேஇந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்ற ஒரு சமூகம், ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.அதிமுக தலைமையில் தான் ஆட்சி.இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு பொருளும் இல்லைதேவையும் இல்லை.
கூட்டணி அமைப்போம்,கூட்டணி மந்திரிசபை அமைப்போம் என்று எந்த அரசியல் கட்சியாவது நம்மோடு கூட்டணி வந்தால் அவர்கள் தயவு செய்து சிந்தித்துக் கொள்ளுங்கள் என்றார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில்தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது.
சிதம்பரத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். அப்பொழுதுகே.பி.முனுசாமியின் பேச்சு குறித்த கேள்விக்குபதிலளித்த அவர், அந்தந்தகட்சிகள் தங்களுடைய கட்சிக்கு பலம் அதிகமாகும், தொண்டர்கள் உற்சாகமாவார்கள் என்ற அடிப்படையில் கருத்துகளை சொல்வது வழக்கம். அந்த வழக்கித்தின்அடிப்படையில் பேசி இருந்தால் அதை குற்றம் சொல்ல மாட்டேன். அது அவர்களுடைய கட்சியை பொறுத்த விஷயம் என்றார்.
அதிமுக தலைமை தேர்ந்தெடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான்அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா அல்லது தமிழக பாஜக சொல்லும்படி பாஜக மேலிடம் கைகாட்டும் நபர்தான்முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விகள் தொடர்ந்து வந்த நிலையில், அதிமுகதலைமை அறிவித்திருக்கும் எடப்பாடிபழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர், அமைச்சர் பதவி கேட்டு கூட்டணிக்கு வந்து விடாதீர்கள்என்பதுபோல் கே.பி.முனுசாமி பேசியுள்ளது பாஜகவின் கூட்டணிக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியேஎன்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.