Kongunadu People's National Party to compete directly with AIADMK

Advertisment

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மூன்று இடங்களைப் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோவை மாவட்டம் சூலூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என இந்த மூன்று தொகுதிகளிலும் கொ.ம.தே.க. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று (13.03.2021) ஈரோட்டில் கொ.ம.தே.க.வின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்தார்.

Advertisment

அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி பாலுவும், கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் துணைப் பொதுச் செயலாளர் பிரிமியர் செல்வம் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் ஆகியோர் வேட்பாளராக போட்டிருக்கிறார்கள். இவர்கள் மூவரும் நிற்கக்கூடிய தொகுதிகளில் நேரடியாக அதிமுகவை எதிர்த்து போட்டியிடவுள்ளார்கள்.