sasikala

Advertisment

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர்.

கொடநாட்டில் இருந்த சொத்துகள், காணாமல் போன பொருட்கள் குறித்து அவரிடம் விசாரணையானது நடத்தப்படுகிறது. கொடநாட்டில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பத்திரங்கள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கிடைத்தது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்திவருகிறது