கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாட்டில் இருந்த சொத்துகள், காணாமல் போன பொருட்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாட்டில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பத்திரங்கள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கிடைத்தது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.